அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்

வேலை வாய்ப்பு அறிவிப்பு

           ஈரோடு மாவட்டம், பண்ணாரி அருள்மிகு மாரியம்மமன் திருக்கோயிலில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இத்துடன் இணைக்கப்பட்ட மாதிரிப் படிவத்தில் கண்டுள்ளவாறு உரிய விபரங்களை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களையூம் இணைத்து விண்ணப்பங்களை துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி - 638 401 என்ற முகவரிக்கு 30.05.2012-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது.

வ.எண் பதவியின் பெயர் ஊதிய விகிதம் தகுதிகள்
1 உள்துறை பூசாரி PB – 9 Rs 5200 – 15900 GP Rs. 2000
  1. எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்
  2. இந்து சமய அறநிலையத்துறை அல்லது ஏதாவது இந்து மத நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற ஆகம பயிற்சி நிறுவனத்தில் ஓராண்டு படித்ததற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்
  3. மந்திரம், வேதம் மற்றும் திருமுறைகளை தினசாரி குடமுழுக்கு காலங்களிலும் ஓதும் திறன் படைத்தவராக இருக்க வேண்டும்.
  4. திருக்கோயிலில் அபிசேகத்தை செய்து வைக்கின்ற அனுபவமும் அறிவூம் பெற்றிருக்க வேண்டும்.
2 பாரிச்சாரகர் PB – 7 Rs 4100 – 10000 GP Rs. 1400
  1. அரசு பணியில் பதிவறை எழுத்தர் பணிக்காக விதி 13ல் குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  2. இத்திருக்கோயிலின் பழக்க வழக்கப்படி செய்யப்படும் நெய்வேத்தியம் மற்றும் பிரசாதங்களை தயார் செய்யூம் திறன் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
  3. ஏதாவது ஒரு திருக்கோயிலில் ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல் மேற்கண்ட பணி புரிந்தமைக்கானச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
3 வெளித்துறை மின்பணியாளர் PB – 7 Rs 4100 – 12300 GP Rs. 1900 மின்னியலில் ஒரு பட்டயப்படிப்பு (Diploma in Electrical Engineering) படித்தவராக இருக்க வேண்டும்.

Click Here to Download the Application

Click Here to Download the Tamil Font