துணை ஆணையர் / செயல் கூடுதல் பொறுப்பு
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்
பண்ணாரி (அஞ்சல்),
சத்தியமங்கலம் (வழி),
ஈரோடு மாவட்டம் – 638 401.
போன்: 04295 243366, 04295 243289
போக்குவரத்து வசதிகள்
பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலுக்குத் தெற்கில் கோயமுத்தூரும், கிழக்கில் ஈரோடும், தென்மேற்கில் மேட்டுப்பாளையமும் புகைவண்டி நிலையங்களாகும்.
பேருந்து வண்டிகளின் (மோட்டர்) மூலம் சத்தியமங்கலத்திலிருந்து, சாமராஜ் நகரம், கொள்ளேகாலும் முதலிய இடங்களுக்குச் செல்லும் பேருந்து வண்டிகளில் ஏறி அம்பிகையின் கோயிலை அடையலாம்.
இதுவன்றி பவானிசாகரிலிருந்து வரும் (கோயமுத்தூர், திருப்பூர், தாராபுரம், மேட்டுப்பாளையம் முதலிய ஊர்களிலிருந்து வரும்) பேருந்து வண்டிகளில் ஏறிக் கொத்தமங்கலம் என்னும் ஊரின் வழியாகத் தேவியின் கோயிலைச் சேரலாம்.
இது தவிர ஞாயிறு, திங்கள், வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் சத்தியில் இருந்தும், கோவையிலிருந்தும் தனிப் பேருந்து வண்டிகள் அம்பிகையின் கோவிலுக்கு விடப்படுகின்றன.