select the language : English Tamil

Welcome to Sri Bannari Amman Temple

திருக்கோயிலில் ஆண்டுக்கு ஓரு முறை நடைபெறும் மகா பெருந்திருவிழா (குண்டம் திருவிழா) விபரம்

பூச்சாற்று

firefox-gray ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த திங்கட்கிழமையில் (சில ஆண்டுகளில் இது பின்னாக வரும்) உத்திரம் நட்சத்திரத்தில் இரவு சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம், புதூர், தாண்டாம்பாளையம், ஆகிய ஊரைச் சார்ந்த பெரிய தனக்கார்களும், தர்மகர்த்தாக்களும், ஆலய அதிகாரிகளும் வந்திருந்து அம்மனுக்கு அபிசேக ஆராதனைகள் செய்வித்துப் பூச்சாற்று நடத்திடுவர்.

அம்பிகை புறப்பாடு

firefox-gray firefox-gray பூச்சாற்று நிகழ்ந்த பின் மறுநாள் அம்மனைச் சப்பரத்தில் எழுந்தருளச் செய்வர். இச்சப்பரம் ஊர்களின் வழியே உலா வரும் போது பக்தர்கள் பூசைகள் செய்தும், காணிக்கை செலுத்தியும் தம் வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.
அம்மனின் புறப்பாடு நிகழும் வேளையில் சோலகர் எனப்படும் மலைவாசிகளும், அருந்ததி இனத்தாரும் வாத்தியங்களை முழக்குவர். பூச்சாற்றிலிருந்து எட்டாம் நாள் திங்கட்கிழமை அம்மன் கோயில் வந்து சேர்கின்றாள்.

கம்பம் நடுவிழா

பூச்சாற்றிலிருந்து ஒன்பதாம் நாள் செவ்வாய்கிழமை இரவு முன் கூறிய பெரியோர்களால் அம்பிகைக்கு ஆராதனை செய்விக்கப் பெற்று அன்றிரவு அக்கினிக்கம்பம் போடுவர்கள். அன்று முதல் அக்கம்பக்கத்தருகே இரவு காலங்களில் சோளர்களும், அருந்ததியினத்தாரும் தங்கள் வாத்தியங்களை முழக்கி, ஆடல், பாடல்கள் செய்வர்கள். காணவும் கேட்கவும் ஆனந்தம் உண்டாகும். பூச்சாற்றிலிருந்து அம்பிகைக்கு தினசரி அபிஷேக ஆராதனை நடைபெறும்.
திங்கட் கிழமை காலையிலிருந்து வேண்டுதலாளர்கள் அம்பிக்கையின் (மெரவனை) திருவீதியுலா நடைபெறும். மெரவணைக்குரிய கட்டணத்தைச் செலுத்தி வேலைப்பெற்றுக் கொள்ள வேண்டும். நன்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பிகையை எழுந்தருளச் செய்து, பல வாத்தியங்கள் முழங்கப் பக்த கோடிகள், வேண்டுதலாளர்கள், வேல் சூலங்களுடன் கோயிலைச் சுற்றி வழிபாடு செய்வார்கள்.

திங்கள் இரவு குண்டம்

குண்டம் திருவிழா

திங்கட்கிழமை பகற்பொழுதில் திருவீதி உலா நிகழும் அன்று இரவு ஓர் அக்கினிக் குண்டம் ஏற்படுத்தப்படும் அழல் வழிபாடாகிய இத்திருவிழாவைக் காண பக்தர்கள் பெருந்திரளாக வந்து ௬டியிருப்பர். திங்கள் இரவு இரண்டு மணி அளவில் அம்மனை அழைக்கப் புறப்படுவர். தெப்பக் கிணற்றருகே சென்று அம்மனைக் குண்டத்தருகில் அழைத்து வருவர். அனைவரும் குண்டத்திருகில் அழைத்து வருவர். அனைவரும் குண்டத்தருகில் வந்து அம்மனை வணங்கிப் பணிந்து நிற்பர். பூசாரி அம்மனுக்கு பூசை செய்து முதலில் குண்டத்தில் இறங்குவர். அவரைத் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் அம்மனைத் தொழுது குண்டத்தில் வரிசையாக இறங்குவர்கள். இந்நிகழ்ச்சி அடுத்த நாளாகிய செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி வரை நடைபெறும். அதன் பிறகு கால்நடைகளும் இறங்குகின்றன. நடுப்பகலில் பொங்கல் மாவிளக்கு எடுப்பர். புதன் இரவு மின் விளக்குகளில் அலங்கரிக்கப்பட்ட இரத்தில் அம்மனை எழுந்தளுளச் செய்து நாதசுரக் கச்சேரியுடன் புறப்பாடு நடைபெறும். மகா முனி வருகையும் நடைபெறும். இரவில் அக்கினிக் கம்பம் பிடுங்கப்பட்டு கிணற்றில் விடப்படும்.

மஞ்சள் நீர் அன்னதானம்

வியாழனன்று மஞ்சள் நீர் உற்சவமும், திருக்கோயிலாரால் அன்னதானமும் நடைபெறும். அன்று அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.


திருவிளக்குப் பூசை

வெள்ளிக்கிழமையன்று மாலை அம்மனுக்கு திருவிளக்குப் பூசை நடைபெறும். மேற்படி பூசையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள்.


மறு பூசை

குண்டம் திருவிழா நடந்த எட்டாம் நாள் திங்கட்கிழமையன்று மறு பூசைத்திருவிழா நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை இரவிலேயே ஏராளமான பக்தர்கள் வந்து கூடிவிடுவர். அம்பிக்கைக்கு சிறப்பு அலங்காரம் அதாவது திருவிழாவன்று அலங்கர்த்தது போலத் தங்கக் கவசம் அமைந்த விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிவித்து மலர் மாலைகளால் ஒப்பனை செய்யப்படும். அபிடேகாதிகள் சிறப்பாக நடைபெறும்.