select the language : English Tamil

Welcome to Sri Bannari Amman Temple

அன்னதானத் திட்டம்

firefox-gray இத்திருக்கோயிலில் அன்னதானத்திட்டம் கடந்த 23.03.2002 முதல் எல்லோராலும் பாராட்டப்படும் வண்ணம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. பசியோடு வரும் பக்தர்களுக்கு பகல் 12.15 மணிக்கு அன்னம் பரிமாறப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் பங்கு கொள்ள விரும்பும் உபயதாரர்கள் அவரது பிறந்த நாள், திருமண நாள் மற்றும் முன்னேனார்களின் நினைவு நாள் அல்லது உபயதாரர் குறிப்பிடும் நாள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நாளில் வருடத்திற்கு ஒரு முறை அன்னதானம் வழங்கப்படும். இதற்கு ரூபாய் 15,000.00 வைப்பு நிதி வரவேற்கப்படுகிறது. ஒரு நாள் மட்டும் 150.00 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டுமானால் ரூ. 1500.00-மட்டும் செலுத்தி பங்கு கொள்ளலாம். வழங்கப்படும் நிதிக்கு வருமான வரித்துறையின் உத்திரவூப்படி வருமான விலக்கு அளிக்கப்படும்.

அன்னமானத்திற்கு நிதி அளிக்கப்பட வேண்டிய முகவரி :

திட்ட நிர்வாகி, அன்னதானத் திட்டம்


அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்.
பண்ணாரி – 638 401.

முக்கிய குறிப்பு

firefox-gray

  • ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற சிறார்களைப் பராமரிப்பதற்கான கருணை இல்லம் ஒன்று இத்திருக்கோயில் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

  • இதில் 50 சிறுவர் மற்றும் 50 சிறுமியர் பயின்று வர அனுமதி பெறப்பட்டு உள்ளது. கல்விச் செலவு, உணவு, உடை பராமரிப்புச் செலவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. சிறுவர், சிறுமியர்களுக்கென தனித்தனி அறைகளும், கழிப்பறை குளியல் அறையுடன் கூடிய இட வசதி உள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், தனியாக ஆழ் குழாய் கிணறு, குளிப்பதற்கு வெந்நீர் வசதி மற்றும் பொழுது போக்கிற்கான அரசு வழங்கிய 2 தொலைக்காட்சிப் பெட்டி, துணி துவைப்பதற்குரிய இயந்திரம் மற்றும் வெந்நீர் காய்ச்சும் மின் இயந்திரங்கள் உபயதாரர் மூலம் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • அருகில் உள்ள முக்கிய நகரங்கள்

    சத்தியமங்கலம் பண்ணாரியிலிருந்து (சுமார் 14 கிலோமீடடர் தொலைவு)

  • அருள்மிகு பவானீஸ்வரர் திருக்கோயில், சுமார் 700 வருடம் பழமை வாய்ந்த அருள்மிகு வேணுகோபாலசாமி திருக்கோயில்,
  • தவளகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்

    கோபிசெட்டிபாளையம் (சத்தியிலிருந்து 25 கிலோமீட்டர்)

  • பாரியூர் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் கோயில்
  • பச்சைமலை அருள்மிகு சுப்ரமணியசாமி கோயில்
  • பவனமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயில்

    மேட்டுப்பாளையம்


  • தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோயில்.

    பவானிசாகர்

  • பவானிசாகர் அணைக்கட்டு உள்ளது.

    கொங்கனஹள்ளி

  • அருள்மிகு மல்லிகர்ஜூனசாமி திருக்கோயில்